Categories
கிரிக்கெட் விளையாட்டு

WTC final : 15 பேர் கொண்ட இந்திய அணி …..வீரர்களின் பட்டியல் அறிவிப்பு…!!!

உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி  வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில்  நடைபெறுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன்  இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க 2 நாட்களே உள்ள நிலையில், போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள் :
விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணைக் கேப்டன்),  ரோகித் சர்மா, ஷுப்மான் கில், புஜாரா,  ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், சகா, அஷ்வின்,  ஜடேஜா, பும்ரா,  இஷாந்த் சர்மா, முகமது ஷமி,  உமேஷ் யாதவ்,  முகமது சிராஜ்.

Categories

Tech |