Categories
மாநில செய்திகள்

இன்று முதல் ஜூலை 1 வரை இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 25 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நாகர்கோவில்- கோவை சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையும், கோவை- நாகர்கோவில் சிறப்பு ரயில் இன்று  முதல் ஜூன் 30 வரையில் ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் சென்னை சென்ட்ரல் -ஹைதராபாத் சிறப்பு ரயில் இன்று முதல் ஜூன் 30 வரையும், ஐதராபாத்- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் ஜூன் 17 முதல் ஜூலை 1 வரையும் ரத்து செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் முன்பதிவு செய்தவர்களுடைய கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |