நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல் யிருந்தது.
இதனையடுத்து தற்போது திருப்பதி கோவிலில் 22 ,23, 24 தேதிகளுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் ஆன்லைனில் இன்று வெளியிடப்படும் என்றும், ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் என 15 ஆயிரம் டிக்கெட்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.