ஓட்ஸ் தக்காளி கஞ்சி
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1/2 கப்
தக்காளி – 4
மிளகுத்தூள் – 2 சிட்டிகை
உப்பு – தேவையானஅளவு
செய்முறை:
முதலில் தக்காளியை மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!