நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை அதிகரிப்பதை அடுத்து தாஜ்மஹால் உள்ளிட்ட புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் வரும் காட்சிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் வரை அனைத்து நினைவுச் சின்னங்களும் மூடப்பட்டிருக்கும் என மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் இன்று முதல் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் உள்ள சுமார் 3,700 சுற்றுலா தளங்கள் திறக்கப்பட உள்ளன. பார்வையாளர்கள் நுழைவு சீட்டுக்களை ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளவும், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.