லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது.
லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனித மேம்பாட்டுத் துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.