நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது.
இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது. இந்நிலையில் +1 வகுப்புக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு மேல் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக சேர்க்கை நடத்தப்படும். குறிப்பிட்ட பிரிவிற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைக்கலாம். அந்த பிரிவு சம்பந்தமாக 50 வினாக்கள் கேட்கப்படும் இந்த மதிப்பின் மூலம் பிரிவுகளை ஒதுக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி +1 மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. மாணவர்களின் சேர்க்கையின் போது எவ்விதமான படிவத்துக்கும் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது. அரசு விதிகளின் படியே செயல்பட வேண்டும். எவ்வித நிபந்தனைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை திட்டவட்டமாக நிறுத்தக் கூடாது. மாற்றுச் சான்றிதழை மாணவர்களுக்கு வழங்கும் போது எவ்வித புகார் கொடுக்கும் இடமின்றி செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.