நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு மட்டும் கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை 28 நாட்களுக்குப் பிறகு போடலாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுவாக கோவிஷீயீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போட்ட பின் 2வது டோஸ் 84 நாட்களுக்குப்பின் போட வேண்டிய நிலையில், கல்வி, வேலை, ஒலிம்பிக் போட்டி போன்ற காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு 28 நாட்களுக்கு பின் போடலாம் என அனுமதி அளித்துள்ளது.