நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இதனைத்தொடர்ந்து இன்று முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் இரண்டு வாரங்களில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மதிப்பெண்களை எவ்வாறு மதிப்பிடலாம்? என்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு தீவிர ஆலோசனை செய்கிறது. நாளை வெளியாகவுள்ள CBSE தேர்வு முடிவுகளின் கணக்கீட்டு வழிமுறைகளையும் கவனத்தில் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.