Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பேனரை கிழித்து கொண்டிருக்கும் போது…. அடித்து பிடித்து ஓடியவர்கள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

தலைவர்களின் பேனர்களை கிழித்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மூலக்கரையூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் தங்களது சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களின் படம் போட்ட பேனர்களை வைத்திருந்தனர். இந்நிலையில் மூலக்கரையூர் மற்றும் கருமடையூரில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை சில மர்ம நபர்கள் கிழித்து கொண்டிருப்பதைப் பார்த்து அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சத்தம் போட்டுள்ளனர். அந்த சத்தத்தை கேட்ட உடன் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இணைந்து இதனை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் சூப்பிரண்ட் கிருஷ்ணராஜ் மற்றும் துணை சூப்பிரண்டு பொன்னிவளவன் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அதே பகுதியில் புதிய பேனர்களை அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் , பேனர்களை கிழித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்படும் எனவும்  உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பேனர்களை கிழித்து விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |