முன்னாள் அமைச்சரான மணிகண்டன் என்பவருக்கு எதிராக நடிகை சாந்தினி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அமைச்சர் மணிகண்டன் மீது கற்பழிப்பு செய்தல், கடுமையாக தாக்குதல், ஏமாற்றுதல், பாலியல் கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் கூறியதை அடுத்து மணிகண்டனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர். ஆனால் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கோரி மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நடிகை அளித்த பாலியல் புகாரில் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்ஜாமீன் வழங்கக் கூடாது என நடிகை எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டுள்ளார்.