திருநெல்வேலியில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் தலைமையில் காவல்துறையினர் ஊரடங்கு காரணத்தால் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள வயல்வெளியில் 4 பேர் சீட்டு விளையாடுவது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீஸ் வருவதை பார்த்ததும் சீட்டு விளையாடிய நபர்கள் அங்கிருந்து தெறித்து ஓடியுள்ளார்.
இதில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பெரியகுளத்தை சேர்ந்த அய்யப்பன்(27), கோபால்(33), முருகன்(48) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்துள்ளனர்.