Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நான் குடிச்சா இவங்களுக்கு என்ன… பரிதாபமாக வாலிபர் பலி… கைது செய்த காவல்துறையினர்…!!

மது அருந்திய காரணத்தினால் தகராறு ஏற்பட்டு வாலிபர் உயிரிழந்த சப்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குப்பாண்டி பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு என்ற தம்பி உள்ளார். பின்னர் விக்னேஷ் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து இரவு நேரத்தில் ஆத்துமேடு பகுதியில் மதுபானம் அறிந்தியுள்ளார். இதனையடுத்து குடிபோதையுடன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வந்த அவருடைய தம்பி சந்துரு தனது அண்ணன் விக்னேஷிடம் மதுபானம் அருந்தியது குறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் ராகுல்ராஜ் என்பவர் சந்துருவுக்கு சாதகமாக பேசி விக்னேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் கோபமடைந்த விக்னேஷ் ராகுல்ராஜியும், அவரின் நண்பர் அரவிந்த்னையும் தாக்கியதாக கூறப்படுகிறது. அதன் பின் இது குறித்து ராகுல்ராஜ் தனது அண்ணனான கோகுல்ராஜிடம் தொலைபேசியின் மூலமாக தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோகுல்ராஜ் நடந்த தகராறு குறித்து விக்னேசை தட்டிக் கேட்ட போது அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது நடந்த தகராறில் கோகுல்ராஜ் விக்னேசை பிடித்து கீழே தள்ளியுள்ளார். அதன் பிறகு குடிபோதையில் இருந்த விக்னேஷ் கீழே கிடந்த கல் மீது மோதி உள்ளார்.

இதனால் படுகாயம் அடைந்த விக்னேஷ் மயக்கம் அடைந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் விக்னேசை மீட்டு சிகிக்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் விக்னேஷ் ஏற்கனவே உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணத்தினால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராகுல்ராஜ் மற்றும் கோகுல்ராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |