2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவியதால் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே பாடம் கற்பிக்கபட்டுள்ளது. இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களின் அடிப்படையில் 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்திற்கு 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 2020-22-ஆம் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகம் வந்து சேர்ந்தது.
இதனையடுத்து லாரிகளில் கொண்டு வரப்பட்ட பாடப்புத்தகங்களை மேலூரில் இருக்கும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் குடோனில் வைத்திருந்தனர். தற்போது திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகிய கல்வி மாவட்டங்களுக்கும் பாடப்புத்தகங்களை தனித்தனியாக பிரித்து லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.