மின்சார வாரியத்தின் முடிவை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் முன்பு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது கொரோனா பரவல் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களை கடந்த 2019-ஆம் ஆண்டு மே மாதம் கட்டிய தொகையை செலுத்தும்படி மின் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மாதம் பயன்படுத்தியதை விட மின்வாரியம் குறிப்பிட்ட அந்த ஆண்டில் அதிக அளவில் மின்சாரம் உபயோகப்படுத்தியுள்ளதால் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.