Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“NEGATIVE அறிக்கை” வாரத்துக்கு 1 நாள் செக் பண்றோம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

முகாமில் பராமரிக்கப்படும் கும்கி யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை வந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் சிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. எனவே அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கோழிகமுத்தி, வரகளியாறு போன்ற முகாம்களில் பராமரிக்கப்படும் 28 கும்கி யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறும்போது, இங்கு பராமரிக்கப்படும் யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்ற அறிக்கை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பாகன்களுக்கும் முகக்கவசம், கையுறை, சனிடைசர் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து யானைகளுக்கு ஏதாவது தொந்தரவு இருக்கின்றதா என்பதை வாரத்தில் ஒருநாள் வன கால்நடை டாக்டர்கள் பரிசோதித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |