இரண்டு காட்டு யானைகள் நீண்ட நேரமாக குளத்துக்குள் இறங்கி குளித்துக் கொண்டிருந்தது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போளுவாம்பட்டி வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் தாணி கண்டி பழங்குடியினர் கிராமம் வழியாக 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முட்டத்து வயல் பகுதியில் இருக்கும் குளத்துக்குள் இறங்கி நீண்ட நேரமாக குளித்துக்கொண்டே இருந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை விரட்ட முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் அந்த யானைகள் உற்சாகமாக நீண்ட நேரம் குளத்திற்குள் நின்று குளித்துக் கொண்டிருந்தது. இதனையடுத்து வனத்துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 யானைகளையும் வனப் பகுதியை நோக்கி விரட்டியடித்தனர்.