குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தில் தாராப்பூர் என்ற நெடுஞ்சாலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் காரில், பாவ்நகர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அவர்கள் இந்திரனாஜ் என்ற இடத்தில் அருகே சென்றபோது லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.
இந்த விபத்தில் இரண்டு பெண்கள், 7 ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர், அவர்கள் உடல்கள் தாராப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிறகு விபத்து குறித்து மாவட்ட காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.