லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை தமிழகத்தில் நுழையவிட்டது தொடர்பாக கோரிக்கையை வைத்து முழங்கினர்.
இதனால் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மாற்று வழியில் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடு பயணம் குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம் செய்த நிலையில் லண்டனிலும் போராட்டம் நடந்ததால் அதிமுக தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஸ்டாலின் விமர்சனத்த்து பதிலடி கொடுத்த முதல்வர் லண்டனில் பம்மிக் கொண்டு மாற்று வழியில் சென்றதாக திமுக ஆதரவாளர்கள் கலாய்த்து வருகின்றனர்.