வயலில் மருந்து பாய்ச்சி கொண்டிருந்த வாலிபர் மீது மின்கம்பி பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதியில் உள்ள டி. வலசை கிராமத்தில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். பின்னர் சங்கராபுரம் அருகில் இருக்கும் கிடங்கன்பாண்டலத்தில் கருணாநிதியின் உறவினரான கண்ணகி வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணகிக்கு சொந்தமான வயலில் களை கொல்லி மருந்து அடிக்க கருணாநிதி சென்றுள்ளார்.
அப்போது வயலில் மருந்து அடித்துக் கொண்டிருக்கும் போது அவ்வழியில் அமைத்து வைக்கப்பட்டிருந்த மின்கம்பி அருந்து அவரின் கழுத்துப் பகுதியில் உரசி உள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி கருணாநிதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.