Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இந்த நேரத்தை தவறாக பயன்படுத்துறாங்க… அசுத்தமான செயல்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பூங்காவில் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து மது அருந்தி அசுத்தம் செய்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை தற்போது ஏழைகளின் சுற்றுலாத் தளமாக விளங்கி வருகின்றது. இதில் காவியம், பெரியார், மேகம் என பல நீர்வீழ்ச்சிகள் அமைந்திருக்கின்றது. இந்த நீர்வீழ்ச்சிகளில் பாய்ந்து வரும் வெள்ளத்தில் குளித்து மகிழ்வதற்காக கடலூர், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனர். இந்நிலையில் குழந்தைகள் விளையாடுவதற்காக சிறுவர் பூங்கா மற்றும் படகுகளில் சவாரிகள் போன்றவை அமைந்திருக்கின்றன. இதனையடுத்து சிறுவர்கள் பூங்காவை கலை பண்பாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்பாக கட்டப்பட்டு தற்போது பராமரித்து வரும் பணியை ஊரக வளர்ச்சித்துறை பொறுப்பில் ஒப்படைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பூங்காவில் சறுகுகள், ராட்டினம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் முறையாக பராமரிக்கப்படாததால் சிறுவர்கள் பூங்கா பழுது அடைந்த  நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் உடைந்து மற்றும் பழுதடைந்து இருக்கிறது. இதனையடுத்து அங்கே இருந்த செயற்கை நீரூற்றின் சுற்றுப்புறத்திலும் செடி கொடிகள் வளர்ந்து இருப்பதை காண முடிகிறது. அதன்பின் கொரோனா காலமாக இருப்பதினால் பூங்காவுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திய சமூக விரோதிகள் அத்து மீறி நுழைந்து மது அருந்துதல் மற்றும் மது அருந்திய காலி மது பாட்டில்களை அங்கங்கே போட்டு உடைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பின்னர் சிறுவர் பூங்காவை பராமரித்து பழுது மற்றும் உடைந்த விளையாட்டு உபகரணங்கள் சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். மேலும் சமூக விரோதிகள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |