தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ 120 குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் இருந்த கவலை நீக்கியுள்ளது.
கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ112 ரூபாய் உயர்ந்தது. மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்து வந்த நிலையில், தற்போது சவரனுக்கு ரூ120 குறைந்து விற்பனை செய்யப்படுகின்றது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 120 குறைந்து 29,696க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ15 குறைந்து ரூ 3712_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. காலை திடீரென ஏறிய தங்கவிலை ஏறிய வேகத்தில் குறைந்ததால் மக்கள் மத்தியில் இருந்த கவலை நீக்கியுள்ளது.