ராஜஸ்தான் மாநிலத்தின் ஜாமினில் வெளி வந்த நபர் மீண்டும் மூன்றாவது முறையாக பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறை தண்டனை பெற்ற கைதி ஜாமினில் வெளியில் வந்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை மீண்டும் கடத்திச் சென்ற ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து தனது மகளை காணவில்லை என அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் அந்த சிறுமி அடைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து மீட்கப்பட்டார். இதையடுத்து அந்த சிறுமி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் அந்த நபரை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் இரண்டு கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் கீழ் அவரை சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து மீண்டும் வெளியில் வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.