காவிரியில் தண்ணீர் திறப்பதை உறுதி செய்யவேண்டுமென்று முதல்வர் முக ஸ்டாலின் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார். அதில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இந்த தண்ணீரில் தான் காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாவிட்டால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்படுகிறது.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தேவையான அளவு காவிரியில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் கூட்டம் வரும் ஜூன் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.