ப.சிதம்பரத்தை செப்.4 வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார். வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வங்கி பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நீரவ் மோடி , மல்லையா ஆகியோரும் இதே போல தப்பி சென்று விடுவார்கள் எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடும் வாதத்தை முன்வைத்தார்.