நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் விரைவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கொரோனா மூன்றாவது அலையை சமாளிக்க மருத்துவ உதவிக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி தர டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி முதல் முதற்கட்டமாக 500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மருத்துவர் மற்றும் செவிலியரின் உதவ விரும்பும் 18 வயதான பிளஸ்-2 படித்தவர்கள் 17-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.