Categories
மாநில செய்திகள்

Breaking: சற்றுமுன் பரிதாபமாக மரணம்….. பெரும் சோகம்….!!!!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்கள் உள்ளன. இதில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்தது. இந்த சிங்கங்களில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இந்த சிங்கத்தின் ரத்த மாதிரி உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வில் அந்த சிங்கத்திற்கு கொரோனா தொற்றுடன், கேனைன் டிஸ்டெம்பர் எனும் தொற்று இருந்ததும் அதனால் அதிகம் பாதிக்கப்படு உயிரிழந்தது என்றும் ஆய்வு மையம் தெரிவித்தது.

கேனைன் டிஸ்டெம்பர்  நாய்களின் மூலம் பரவும். வண்டலூர் உயிரியல் பூங்காவில் நாய்கள் அதிகளவில் சுற்றி திரிவதால் அவற்றின் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குஜராத்தின் கிர் காடுகளில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்ட சிங்கங்கள் பலியாகின என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது உயிரிழந்த ஆண் சிங்கம், கொரோனாவால் உயிரிழந்ததா என்று பூங்கா நிர்வாகம் விசாரனை நடத்தி வருகிறது. அடுத்தடுத்து இரண்டு சிங்கங்கள் உயிரிழந்துள்ளதால் பூங்கா ஊழியர்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Categories

Tech |