Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல… டெல்லி நீதிமன்றம் அனுமதி…!!!

சுகில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை தமிழகம் அழைத்துச் செல்ல டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டுவரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சிலர் பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் ஆஜராகுமாறு குழந்தைகள் நல அமைப்பு சம்மன் அனுப்பியிருந்தது. இதை தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது.

மேலும் அவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி அங்கு இருந்த அவரை சிபிசிஐடி போலீசார் பிடிக்க சென்றபோது, இதை தெரிந்து கொண்டு அவர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் டெல்லியில் காசியாபாத்தில் அவர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி சிபிசிஐடி போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவர் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மொட்டை அடித்து மாறுவேடத்தில் பதுங்கி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்த அவரை தமிழகம் அழைத்துச் செல்வதற்கு டெல்லி நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தமிழக சிபிசிஐடி வசம் ஒப்படைத்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Categories

Tech |