கேரட் அறுவடைக்காக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சியில் இருக்கும் வி. சி காலனி கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காலனியில் வசிக்கும் தொழிலாளர்களை கேரட் அறுவடைக்காக அழைத்து செல்ல லாரி ஒன்று சென்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த லாரியில் ஏறிய தொழிலாளர்களை அதிகாரிகள் கீழே இறக்கி விட்டதோடு, லாரியை பறிமுதல் செய்து ஊட்டி நகர மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அதிகாரிகள் லாரி டிரைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.