Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அது உடம்புல அப்படி இருந்துச்சு… அலறியடித்து ஓடிய பொதுமக்கள்… வனத்துறையினரிடம் கோரிக்கை…!!

குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த காட்டெருமை விவசாய பயிர்களை மிதித்து அட்டகாசம் செய்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி பேபி நகருக்குள் புகுந்து விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு அடித்து பிடித்து ஓடினர். இதனையடுத்து அந்த காட்டெருமை நீண்ட நேரமாக அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து விவசாய பயிர்களை மிதித்து நாசம் செய்துள்ளது.

அதன்பின் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த அந்த காட்டெருமையின் உடலில் கட்டி போன்ற தோற்றம் இருந்ததாகவும், வனத்துறையினர் கண்காணித்து அதற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |