யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மலை ரயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து ஊட்டிக்கு 46.61 கிலோ மீட்டர் தூரம் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகளும் செல்வதற்கு மிகவும் ஆசைப்படுவர். ஏனெனில் இந்த பயணத்தின்போது சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளின் அழகை கண்டு ரசிக்க முடியும்.
இந்நிலையில் இந்த மலை ரயிலானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1899 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த ரயில் சேவை தொடங்கி 122 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. மேலும் யுனெஸ்கோ அமைப்பு கடந்த 2005-ஆம் ஆண்டு இந்த மலை ரயிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.