முன் விரோதம் காரணமாக வாலிபரை தாக்கி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முன்விரோதம் காரணமாக ராம்குமாரை சுற்றி வளைத்த மர்ம கும்பல் அவரை கட்டையால் அடித்ததோடு, கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி உள்ளனர். மேலும் அப்பகுதியில் மீண்டும் கோஷ்டி மோதல் நடைபெற வாய்ப்பு இருந்ததால் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.