Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகள்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!

ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு மத்திய அரசு பிளஸ் 2 சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி, +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. தற்போது +2 மாணவர்களின் பொதுத் தேர்வு மதிப்பெண்கள் எப்படி வழங்குவது என்பது குறித்து தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றது.

மேலும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், +1 வகுப்பிற்கு மாணவர் சேர்க்கை எப்படி நடத்துவது என்பது குறித்து கேள்வி எழுந்தது. இதனால்  ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரையாண்டு, எந்த மதிப்பெண் அதிகமோ அதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். காலாண்டு, அரையாண்டில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 35 வழங்க வேண்டும். தேர்வில் வருகைபுரியாத மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்க வேண்டும் என தமிழக அரசு கூறியுள்ளது.

Categories

Tech |