தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்குவதை காட்டிலும் புத்தகங்களை வழங்குங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆடம்பர வாழ்க்கையில் தனக்கு துளியும் விருப்பமில்லை, எனக்கு பரிசளிக்க விரும்பினால் புத்தகங்களை வழங்குங்கள் என எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பொன்னாடைகள், பூங்கொத்துகள் வழங்கப்படுகின்றது. அதற்கு பதில் எனக்கு புத்தகத்தை பரிசளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார். திமுக சார்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் “ஒன்றிணைவோம் வா” ஊரடங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் இளைஞர் அணி செயலாளர் என்ற முறையில் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறேன்.
இந்த பயணம் எனக்கு உற்சாகத்தை தந்தாலும் சில இடங்களில் பட்டாசு வெடித்து பிளக்ஸ் வைத்து பொன்னாடை பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். எனவே அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்கும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. இப்பணியில் இளைஞர் அணியும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். மேலும் திமுக அறக்கட்டளைக்கு நிதி அளிப்போர் இடம் செலவு குறித்து வெளிப்படையாக பகிரப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.