வாலாஜாவில் இருந்து சென்னைக்கு நடை பயணம் செல்ல முயன்ற கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தையை காவல்துறையினர் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் கைக்குழந்தையுடன் கர்ப்பிணி பெண் சென்னைக்கு நடந்து செல்வதாக கால்நடை மருத்துவர் ரவிசங்கர் என்பவர் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர் இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அந்த கர்ப்பிணி பெண் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் என்பதும், மேலும் இவர் கணவரால் கைவிடப்பட்டு கைக் குழந்தையுடன் தனியாக வசித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தான் சிறிது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், தற்போது உடல்நலம் சீராக இருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
இதனை அடுத்து அந்த கர்ப்பிணி பெண் எங்கு செல்வது என்று தெரியாமல், வாழ்வாதாரத்திற்காக சென்னைக்கு குடி பெறுவதற்கு முடிவெடுத்துள்ளார். பின்னர் அந்த மருத்துவர் காவல் நிலையத்தைத் தொடர்புகொண்டு இளம்பெண் மற்றும் அவரின் பெண் குழந்தையை அழைத்து சென்றுள்ளார். இதனைப் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் இணைந்து கர்ப்பிணி பெண் மற்றும் கைக்குழந்தையை வேலூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் கைக்குழந்தையின் வாய்பிளவு பிரச்சனையை தீர்க்க கால்நடை மருத்துவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.