Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசி கட்டாயம்!”.. முதன் முறையாக அறிவித்த ரஷ்ய நகரம்..!!

உலகில் முதன் முதலாக ரஷ்யாவின் ஒரு நகரத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தீவிரமடைந்து வருகிறது. முதல் அலையிலிருந்து விடுபட்டு மக்கள் பழைய நிலைக்கு திரும்பியபோது, இரண்டாம் அலை தொடங்கிவிட்டது. இதற்கு ஒரே தீர்வாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தான் உள்ளது.

நிபுணர்கள், மருத்துவர்கள் என்று பல தரப்பினரும் பொதுமக்களை தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். என்றாலும் தற்போது வரை உலகில் எந்த நகரமோ அல்லது நாடோ கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் பொதுத்துறையின் பணியாளர்கள், தனியார் மற்றும் அரசு பணியாளர்கள் என்று அனைவருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |