நடிகர் ஆரி பகவான் பட கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் ஆரி ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடிய ஆரி ரசிகர்களின் பேராதரவுடன் டைட்டிலை வென்றார். தற்போது நடிகர் ஆரி பகவான், அலேகா, எல்லாம் மேல இருக்குறவன் பார்த்துப்பான் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் . இந்நிலையில் பகவான் படத்தின் புதிய அப்டேட்டை ஆரி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
#Bhagavan shooting spot https://t.co/FZ6AdznFXk
— Aari Arujunan (@Aariarujunan) June 15, 2021
அதில் ஆரி பகவான் படத்தின் கதாநாயகி பூஜிதா பொன்னாடாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். மேலும் அவர் பகவான் படத்தில் பூஜிதாவின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் இரண்டு நாள் படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.