Categories
மாநில செய்திகள்

BREAKING: புதிய புகைப்படத்தை வெளியிட்டது போலீஸ் – பரபரப்பு…!!!

விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கும் பப்ஜி மதனை பற்றி அவரது மனைவி மற்றும் தாய், தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விளையாட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தி ஆன்லைன் விளையாட்டின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களை ஆபாசமாக பேசி தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதனால் அவர் மீது 160 புகார்கள் வந்ததை அடுத்து, அவரை நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர் மீது பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் மதனின் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் என்பது தெரியவந்தது. இவரது மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது அவரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் பப்ஜி மதனால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வரவேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர் ஆபாசமாக பேசும்போது எதிர்தரப்பில் பேசும் பெண் அவருடைய மனைவி தான் என கூறியுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள பப்ஜி மதனின் புகைப்படம் ஒன்றையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |