Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் ‘பார்டர்’ ஆகஸ்ட் மாதம் ரிலீஸா?… வெளியான தகவல்…!!!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பார்டர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதில் இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள பார்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Arjun Vijay romances Stefy Patel in Borrder; new photos from the film  surface online

‘குற்றம் 23’ படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய், அறிவழகன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த படத்தில் ஸ்டெபி படேல், ரெஜினா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆல் இன் ஆல் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வருகிற ஆகஸ்டு மாதம் 12-ஆம் தேதி பார்டர் படம் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |