விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கணவர் குடித்து வந்து தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் கண்ணன் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் முன்பு உஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உஷா அவரது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் சண்டை முற்றிப்போனது.
இதனைத்தொடர்ந்து மனமுடைந்த உஷா வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். மேலும் இதுகுறித்து உஷாவின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.