விருச்சிகம் ராசி அன்பர்களே.! ஒற்றுமை பலப்படும்.
இன்று எதிர்மறையாக பேசுபவரிடம் விலகி இருக்க வேண்டும். வியாபாரத்தில் ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவுகள் தாமதமாக வந்து சேரும். குடும்ப உறுப்பினர்கள் கூடுதல் பாசத்துடன் இருப்பார்கள். தைரியத்துடன் செயல்பட்டு சாதனை படைக்க முடியும். கடன்சுமை குறையும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மாறிவிடும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உங்களுடைய அனுபவத்தினால் எல்லா விஷயங்களையும் சரி செய்து கொள்ள முடியும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாய துறையில் உள்ளவர்களுக்கு கொள்முதல் பொருள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விடும்.
குடும்பத்தை பொருத்தவரை ஒற்றுமை பலப்படும். காதல் கண்டிப்பாக கைகூடும். மனதிற்கு பிடித்தவர்களை கண்டிப்பாக கரம் பிடிப்பீர்கள். மாணவர்களுக்கு வெற்றி கூடிவரும். மேற்கல்விக்கான முயற்சியாக இருந்தாலும் அரசாங்கத்துறை தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தாலும் எல்லாம் நல்லபடியாக நடக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கின்றது.
அதிஷ்டமான திசை: வடக்கு அதிஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை