Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு….! பொறுப்புகள் ஏற்க வேண்டாம்….! கவனம் தேவை….!!

கும்பம் ராசி அன்பர்களே.! பொறுப்புகள் ஏற்க வேண்டாம்.

உங்கள் மீது பலரும் நல்ல எண்ணம் கொள்வார்கள். இதனால் மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். வியாபாரத்தில் உருவான குறுக்கீடுகள் விலகி செல்லும். பணவரவு கிடைக்கும். சில காரியங்களில் கவனம் தேவை. அவசர அவசரமாக எந்த ஒரு பணியிலும் ஈடுபட வேண்டாம். மனதை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும். குழப்பங்கள் ஏற்படக் கூடிய சூழல் உருவாகும். சிந்தித்து செயல்பட வேண்டும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க கூடிய சூழல் இருக்கின்றது. உங்களுடைய கடுமையான உழைப்பால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்கவேண்டாம். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். மற்றவருக்கு பண விவகாரத்தில் எந்த உதவியும் செய்ய வேண்டாம்.

பணப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம். வியாபாரம் ரீதியாக பயணம் செல்லும்போது கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்களும் நடைமுறை சிக்கல்களும் ஏற்படும். காதலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்களுக்கு படிப்பை தவிர வேறு எதிலும் சிந்தனை செல்லக்கூடாது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 6                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்

Categories

Tech |