விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், முத்துப்பாண்டி, கருப்பசாமி, விஜயகுமார் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து 5 பேரை கைது செய்த போலீசார் சீட்டு விளையாடுவதற்கு பயன்படுத்திய 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.