Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விபரீத விளையாட்டு…. மனதை உலுக்கும் மரணம்…. கண்ணீர் இரங்கல்…..!!!!!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் வசித்து வரும் தடியன்,செல்வ வதி கூலி தொழிலாளர்களான இவர்களது மகன் பிரசாந்த் 6 வயது சிறுவன். அதே பகுதியில் வசித்து வரும் சுபா என்பவரது மகன் கோடீஸ்வரன் வயது 15 இவனது தந்தை முனியப்பன் உயிரிழந்த நிலையில் தாய் சுபா அரவணைப்பில் இருந்துள்ளான். இரு சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்ற நேரத்தில் கிருஷ்ணன்கோவில் பகுதியிலுள்ள தோப்பிற்கு பிரசாந்தை கோடீஸ்வரன் அழைத்துச் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது இருவரும் சண்டையிட்டதில் பிரசாந்தை கோடீஸ்வரன் கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கிணற்றுக்குள் விழுந்து கிடந்த பிரசாந்தை உயிரிழந்த நிலையில் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கிணற்றுக்குள் தள்ளி விட்ட கோடீஸ்வரன் என்ற சிறுவனை அவரது உறவினர்கள் தலைமறைவாக மறைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கிருஷ்ணன்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிறுவனை உறவினர்களிடம் விசாரணை செய்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.6 வயது சிறுவன் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |