Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் திருமணமான பெண்ணை கரம் பிடித்த காதலன்… அதுவும் எங்க வச்சு தெரியுமா…? வைரலாகும் புகைப்படம்…!!!

பீகார் மாநிலத்தில் திருமணமான பெண் வீட்டை விட்டு வெளியேறிய காதலருடன் ரயிலில் திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம் சுல்த்கஞ்ச் என்ற கிராமத்தை சேர்ந்த அனு குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணத்திற்கு முன்பு அவர் ஆஷ்குமார் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் அந்த பெண் முறையாக கணவருடன் வாழாமல் காதலன் நினைவாகவே இருந்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அனு குமாரி தனது காதலருடன் தலைமறைவாகியுள்ளார். இருதரப்பு சேர்ந்தவர்களும் அவர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

பின்னர் இருவரும் பெங்களூரை நோக்கி ரயிலில் சென்றுக் கொண்டிருந்தபோது, நம்மை எப்படியாவது பிரித்து விடுவார்கள் என எண்ணி ரயிலிலேயே திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி ரயிலில் உள்ள கழிப்பறைக்கு முன்னால் நின்று திருமணமான காதலிக்கு பாரம்பரிய முறைப்படி நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார். ரயிலில் கழிப்பிடம் முன்பு திருமணம் செய்து கொண்டதை பார்த்த பயணி ஒருவர் அதை புகைப்படம் எடுத்துள்ளார். இதை அடுத்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இருவரின் புகைப்படமும் வைரல் ஆனதை அடுத்து, குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரும் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |