ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்கள்.
அமெரிக்க நாட்டிலிருக்கும் சிகாகோ மகாணத்தில் ரசாயன திரவங்கள், க்ரீஸ் பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த 70 நபர்களை பத்திரமாக மீட்டுள்ளார்கள்.
மேலும் இது ரசாயன பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை என்பதால் தீயை அணைப்பதற்கு தண்ணீரை பயன்படுத்தினால் இரண்டும் கலந்து காற்று மாசை ஏற்படுத்திவிடலாம். எனவே தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பயன்படுத்தாமல் பிற முயற்சிகளில் இறங்கியுள்ளார்கள்.
இதனால் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் இந்த தீ இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்கள்.