நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்புபடுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்திலும் இம்மாத இறுதிவரை மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. பேருந்துகள் இயக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.