Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பவானியில் நீர்வரத்து அதிகரிப்பு…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கோவை,மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கேரளக் காடுகளில் கனமழையால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் பவானி ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |