தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் நலனைக் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் கருத்து தெரிவிக்கலாம் என ஏ.கே.ராஜன் குழு அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் ஜூன் 23ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கலாம். தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தை ஏ.கே.ராஜன் குழு கேட்டு வருகிறது.