வியட்நாமில் கையில் குழந்தையுடன் இருக்கும் மனைவியை கணவன் அடித்து துன்புறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
வியட்நாமில் வூ தி தூ லி (Vu Thi Thu Ly) எனும் 27 வயது பெண், பிரபல வானொலியில் செய்தி வாசிப்பாளராகப் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வூஷு ங்குயென் ஸ்வான் (Nguyen Xuan Vinh) என்ற கணவரும் ஒரு மகளும் இருக்கின்றனர். தற்காப்புக் கலை பயிற்றுனராக இருக்கும் கணவர் மனைவி வூ தி தூ லியை தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததால் அவர் விவகாரத்து பெற்றார். பின் சமாதானமாக இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கியதையடுத்து 2 மாதங்களுக்கு முன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில், வீட்டில் ஒரு அறையில் இருந்த டிவியை என்னிடம் கேட்காமல் வேறு அறைக்கு ஏன் மாற்றி வைத்தாய் என்று கூறி சண்டையிட்ட கணவர், பச்சிளங் குழந்தையைக் கையில் வைத்திருந்தபோதும் விடாமல் மனைவியை தாக்கினார்.
கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் காலால் எட்டி உதைத்த அந்த கொடூரன், முகத்தில் குத்தி தரையில் வீழ்த்தி குழந்தையோடு இருந்த மனைவியை கொடூரமாக தாக்கினான்.
கடந்த 10 ஆண்டுகளாக இதுபற்றி ஆய்வு நடத்தப்பட்டதியதன்படி 3-ல் 2 பெண்கள் கணவனால் அடித்து தாக்கப்படும் கொடூரத்துக்கு ஆளாவதாகவும், இப்படி சித்ரவதை செய்யப்படும் பெரும்பாலான பெண்கள் அதனை வெளியில் கூறுவதில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது போன்று வீட்டில் பெற்றோரின் வன்முறை தனமான நடவடிக்கையை பார்த்து வளரும் சிறு குழந்தைகளும், குடும்பத்தில் அடிதடி சகஜம் என்ற மனநிலைக்கு வருவதாகவும், ஆணாக இருந்தால் மனைவியை அடித்து ஆதிக்கம் செலுத்துதல் , பெண்ணாக இருந்தால் அடி சித்ரவதை எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு சமரசத்தோடு அமைதியாக வாழ்தல் என்ற ஒருவித மனநிலைக்கு அவர்கள் தள்ளப்படும் அபாயம் இருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.